தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் வாரிசு

சுப்ரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் ஆகிய மூன்று படங்களில் இயக்குநராக, தயாரிப்பாளராக மற்றும் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டியவர் சசிகுமார்.
 
இப்போது நகரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் தயாரிப்பாளர் நடிகர் விக்ரம்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த சசிகுமாருக்கு நடிகை ஸ்ரீதேவியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
உடனே மும்பைக்கு விமானத்தில் பறந்த சசிகுமார், ஸ்ரீதேவியைச் சந்தித்துள்ளார். அவருக்கு தனது வீட்டில் விருந்தளித்த ஸ்ரீதேவி, தன் மகள் ஜானவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த வேண்டும் என சசிகுமாரைக் கேட்டுக் கொண்டாராம். கூடவே, "உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. உங்களுடன் ஜோடியாக என் மகளை அறிமுகப்படுத்தினால் இன்னும் சந்தோஷம்" என்று கூற, மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக ஒப்புக் கொண்டாராம் சசிகுமார்.

ஏற்கனவே தெலுங்கு படத்தில் ஜானவியை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வந்தன. நாகார்ஜுனா-அமலா தம்பதியின் மகனான அகிலுக்கு ஜோடியாக நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு தமிழ் படத்தில் அறிமுகப்படுத்துகிறார்.

ஜானவிக்கு 14 வயதுதான் ஆகிறது. இப்போதே முயற்சித்தால்தான், நல்ல கதை, கதாபாத்திரங்கள் தேர்வு என ஒரு வருடம் கழிந்து விடும். அதற்குள் ஜானவி கதாநாயகி தகுதியை அடைந்து விடுவார் என்று கருதுகிறார்.

ஸ்ரீதேவி 16 வயதில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். மகளையும் அதே பதினாறு வயதில் அறிமுகப்படுத்த இப்போதே வலுவாக அடித்தளம் போடுகிறார் ஸ்ரீதேவி.

Anjali Unseen Photos

கிளாமருக்கு கிரீன் சிக்னல்

இதுவரை கவர்ச்சிக்கு ஓட்டுப் போடாமல் இருந்து வந்த பாவனா இப்போது கவர்ச்சிக் கட்சிக்குத் தாவ முடிவு செய்து விட்டாராம்.

அசல் படத்துக்குப் பின்னர் தன்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்திருந்தார் பாவனா. இருப்பினும் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை.இதனால் சற்றே சோர்ந்து போய்விட்டாராம்.

வாய்ப்புகள் வராமல் போனதற்கு பாவனாவும் கூட ஒரு காரணம். முன்னணி நடிகர்களோடு மட்டுமே ஜோடியாக நடிப்பேன் என்பதை ஒரு பாலிசியாகவை வைத்துள்ளதால் பீல்டில் படு ஹாட்டாக இருக்கும் பிற இளம் நாயகர்கள் பாவனாவை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.
இதனால் வருத்தம் அடைந்திருந்த பாவனா, இந்த பட வாய்ப்புப் பஞ்சத்தைப் போக்க கவர்ச்சி கோதாவில் குதிக்கத் தயாராகி விட்டார். இதற்காக கவர்ச்சிகரமான போஸ்களுடன் புதிய ஆல்பத்தை கோலிவுட்டில் ரவுண்டு அடிக்க விட்டுள்ளாராம்.

கிளாமர் களத்தில் குதித்து கோலிவுட்டில் தன்னை ஆணித்தரமாக நிரூபிக்க முடிவு செய்துள்ள பாவனா, சைடில், விளம்பரப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளாராம்.
சினேகாவைப் போல திரைப்படங்களோடு விளம்பரங்களிலும் விறுவிறுப்பாக நடிக்கப் போகிறாராம்.

Kushboo Hot Photos

மீண்டும் ஒரு கேரள இறக்குமதி

முன்னாள் இந்திய அழகியும், உலக அழகிப் போட்டியில் இரண்டாவதாக வந்தவருமான பார்வதி ஓமணக்குட்டன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் 'உமா மகேஸ்வரம்'.

'சிவனும் சக்தியும் (மகேஸ்வரனும் - உமாவலும்) சேரும்போதுதான் உலகில் உயிர்கள் பிறக்கின்றன. அதே நி்லையில்தான் கலையும் பிறக்கிறது. ஏனெனில் உயிர்தான் கலை' என்ற கதைக் கருவுடன் உருவாகிறதாம் இந்த உமா மகேஸ்வரம்.

ஹீரோவாக டான்ஸர் மணி அறிமுகமாகிறார். நிதின் ராமகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடந்தது.

பிரபல இயக்குநர் கே விஸ்வநாத் நேரில் வந்து வாழ்த்தினார்.

ட்ரூசோல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு மது அம்பாட், இசை சந்தோஷ் நாயர், பிஆர்ஓ வெங்கட்.

கர்நாடக மாநிலத்தின் ஹம்பி போன்ற கலைச் சிறப்பு மிக்க இடங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கிறது.

மீண்டும் பாலா - சூர்யா

விஷால்- ஆர்யாவை வைத்து பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் சூர்யா.
 
கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் அவன் இவன் படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது.

அடுத்த சில மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடித்து வெளியீட்டுக்குத் தயார்படுத்திக் கொள்வதாக பாலா தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர் மிகவும் உற்சாகமாக உள்ளார்.

இந்த நிலையில் அவரை உற்சாகப்படுத்தும் இன்னொரு விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாலா.

இந்தப் படத்தில் நடிகர்  சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதே அது.

உண்மையில் அவன் இவன் படத்தில் சூர்யாவையும் அவரது தம்பி கார்த்தியையும் நடிக்க வைக்கத்தான் பாலா திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து அவர்கள் இருவரையும் அழைத்துப் பேசிய போது, கால்ஷீட் பிரச்சினையைக் காட்டி, நடிக்க முடியாத சூழலை விளக்கினார்களாம்.

இப்போது, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்குமாறு சூர்யாவிடம் சொன்னாராம் பாலா. சில தினங்கள் மட்டுமே கால்ஷீட் தேவைப்பட்டதால், உடனே ஒப்புக் கொண்டாராம் சூர்யா.

Ravana