நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் நாயகனாக நடிக்கும் படம் மேதை. இப்படத்தின் 75 சதவீத சூட்டிங் முடிந்து விட்ட நிலையில், மே மாதம் ரீலிஸ்க்கு திட்டமிட்டிருக்கிறார்கள். மேதையில் ராமராஜன் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். காமெடிக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ராமராஜன் - கவுண்டமணி - செந்தில் கூட்டணி காமெடி பட்டிதொட்டியெங்கும் ரசிகர்களை குஷிப்படுத்தி வெற்றி பெற்றதைப் போல ராமராஜன் - வடிவேலு கூட்டணி காமெடும் பேசப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். படத்தில் 150 பள்ளிக்குழந்தைகளுடன் ராமராஜன் பாடும் பாடல் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறும் மேதை இயக்குனர் என்.டி.ஜி.சரவணன், இந்த படத்துக்கு பின்னர் ராமராஜன் ஒரு ரவுண்ட் வருவார் என்றும் கூறியுள்ளார்.
படத்தில் ராமராஜன், வடிவேலு தவிர இயக்குனர் ராஜ்கபூர், சார்லி, கோட்டை குமார், ஆர்யன், அலெக்ஸ், கொல்கத்தா மாடல் அழகி கவுசிகா, அஜய், ஹாசினி ஆகிய புதுமுகங்கள் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.
0 Comments