0 Comments
முன்னாள் இந்திய அழகியும், உலக அழகிப் போட்டியில் இரண்டாவதாக வந்தவருமான பார்வதி ஓமணக்குட்டன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் 'உமா மகேஸ்வரம்'.
'சிவனும் சக்தியும் (மகேஸ்வரனும் - உமாவலும்) சேரும்போதுதான் உலகில் உயிர்கள் பிறக்கின்றன. அதே நி்லையில்தான் கலையும் பிறக்கிறது. ஏனெனில் உயிர்தான் கலை' என்ற கதைக் கருவுடன் உருவாகிறதாம் இந்த உமா மகேஸ்வரம்.
ஹீரோவாக டான்ஸர் மணி அறிமுகமாகிறார். நிதின் ராமகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடந்தது.
பிரபல இயக்குநர் கே விஸ்வநாத் நேரில் வந்து வாழ்த்தினார்.
ட்ரூசோல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு மது அம்பாட், இசை சந்தோஷ் நாயர், பிஆர்ஓ வெங்கட்.
கர்நாடக மாநிலத்தின் ஹம்பி போன்ற கலைச் சிறப்பு மிக்க இடங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கிறது.
விஷால்- ஆர்யாவை வைத்து பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் சூர்யா.
கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் அவன் இவன் படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது.
அடுத்த சில மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடித்து வெளியீட்டுக்குத் தயார்படுத்திக் கொள்வதாக பாலா தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர் மிகவும் உற்சாகமாக உள்ளார்.
இந்த நிலையில் அவரை உற்சாகப்படுத்தும் இன்னொரு விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாலா.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதே அது.
உண்மையில் அவன் இவன் படத்தில் சூர்யாவையும் அவரது தம்பி கார்த்தியையும் நடிக்க வைக்கத்தான் பாலா திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து அவர்கள் இருவரையும் அழைத்துப் பேசிய போது, கால்ஷீட் பிரச்சினையைக் காட்டி, நடிக்க முடியாத சூழலை விளக்கினார்களாம்.
இப்போது, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்குமாறு சூர்யாவிடம் சொன்னாராம் பாலா. சில தினங்கள் மட்டுமே கால்ஷீட் தேவைப்பட்டதால், உடனே ஒப்புக் கொண்டாராம் சூர்யா.
Subscribe to:
Posts (Atom)