வேலாயுதம்

விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு வேலாயுதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.
சுறா படத்தையடுத்து, மலையாளப் படமான பாடிகார்டு ரீமேக்கில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் பெயர் காவல்காரன் என்று முதலில் விஜய் தரப்பில் கூறப்பட்டது. பின்னர், காவல்காரன் தலைப்பை சூட்டுவது குறித்து யோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் ஜெயம் ராஜா இயக்கும் விஜய்யின் 52வது படத்துக்கு அந்த மாதிரி குழப்பம் எதுவும் இல்லை. தலைப்பை வைத்த பிறகுதான் படப்பிடிப்புக்குச் செல்வது ஜெயம் ராஜாவின் வழக்கம்.

எனவே விஜய்யின் இந்தப் படத்துக்கு வேலாயுதம் என்ற பெயரைச் சூட்டியுள்ளனர். விஜய் முன்பு வைக்கப்பட்ட நான்கைந்து தலைப்புகளில், அவரே விரும்பித் தேர்வு செய்த தலைப்பாம் இது. இசையமைப்பாளராக தேவிஸ்ரீபிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் நடிகர்கள், இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஜூலை மாதம் வேலாயுதம் படப்பிடிப்பு துவங்குகிறது.