ஆர்வம் மிகுதியால் தன்னைக் கட்டிப்பிடித்த ரசிகர் ஒருவருக்கு பளார் விட்டார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.
பொதுவாகவே படங்களில் பிஸியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. தவிர்க்க முடியாமல் பங்கேற்கும் நிலை வந்தாலும் ஏகப்பட்ட செக்யூரிட்டிகளோடு தான் வருகிரார்.
சமீபத்தில் ஒரு விருந்துக்கு அவரை அழைத்திருந்தார் ப்ரியங்காவுக்கு வேண்டப்பட்டவர். கட்டாயம் பங்கேற்றே தீர வேண்டும் என்பதால், படப்பிடிப்பு தளத்திலிருந்து கேரவனில் உடை மாற்றிக் கொண்டு விருந்துக்கு சென்றார் ப்ரியங்கா.
விருந்து நடந்த வீட்டின் முன்னால் வந்து இறங்கியபோது அங்கு ஏராளமான இளைஞர்கள் கூடி நின்றனர். அதில் ஒருவர் பிரியங்கா சோப்ராவை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு படாரென்று ப்ரியங்காவைக் கட்டிப் பிடித்தார். கூடி நின்ற மற்ற இளைஞர்களும் அவரை சூழ்ந்து, ப்ரியங்காவைத் தொட முயன்றனர்.
இத்ல் ஆத்திரமடைந்த பிரியங்கா சோப்ரா, அந்த ரசிகரின் பிடியில் இருந்து திமிறி விடுபட்டார். அப்போதும் அந்த இடத்தைவிட்டு நகராத ரசிகர் கன்னத்தில் ஓங்கி ஒரு பளார் விட்டார்.
உடனே ப்ரியங்காவுடன் வந்திருந்த பாதுகாவர்கள் அந்த ரசிகரை அடித்துத் துவைத்தனர். அவரை போலீ சில் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் பிரியங்கா வேண்டாம் விட்டு விடுங்கள் என்று கூறி விட்டார்.
இந்த சம்பவத்தால் மூட் அவுட் ஆன ப்ரியங்கா, விருந்துக்குச் செல்லாமல் வண்டியை வீட்டுக்கு விடச் சொன்னதில், விருந்துக்கு அழைத்த நண்பர் மனம் உடைந்தது தனிக்கதை!
0 Response to "உணர்ச்சி மிகுதில் பிரியங்காவை கட்டிப்பிடித்த ரசிகர்"
Post a Comment