பிரகாஷ்ராஜ் மீண்டும் திருமணம்

மனைவி லலிதகுமாரியை சமீபத்தில் விவாகரத்து செய்த பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், தனது நீண்ட நாள் காதலி போனி வர்மாவை திருமணம் செய்கிறார்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவின் அனைத்து மொழிப் படங்களிலும் சிறந்த குணச்சித்திர - வில்லன் நடிகராகத் திகழ்பவர் பிரகாஷ்ராஜ். காஞ்சீபுரம் படம் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

தமிழில் பல படங்களைத் தயாரித்துள்ளார். இப்போதும் தயாரித்துக் கொண்டுள்ளார்.

நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதாகுமாரியை 1994-ல் காதல் திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ் ராஜ். இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜையும் பெண் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் நெருங்கி பழகுவதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து பிரகாஷ்ராஜுக்கும் லலிதாகுமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பிரகாஷ்ராஜ்.

லலிதா குமாரியோ தன்னை கணவருடன் சேர்த்து வைக்குமாறு பதில் மனுதாக்கல் செய்தார். பின்னர் இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்தனர். அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ்-போனி வர்மாவும் ஒரே வீட்டில் தங்கி வசித்தனர்.

விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடப்பதாகக் கூறப்படுகிறது.

அழகை காட்டினால்தான் படம் ஓடும்


நான் உடலை மறைத்து இழுத்து போர்த்திக் கொண்டு நடித்தால் அந்த படம் ஓடாது, என்று கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். பாலிவுட்டின் கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத் மும்பையில் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், நான் படிப்பை முடித்ததும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் அவர்களை விட்டு பிரிந்து வந்து தனியாக வசித்தேன்.
 
அப்போது முன்னணி டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் சென்று “சான்ஸ்” கேட்டேன். அவர்கள் என் முகத்தைப் பார்த்து நடிகைக்கான தகுதி இல்லை என்று நிராகரித்தனர். ஆனாலும் மனம் தளரவில்லை. என்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று செலவு செய்தேன். அதுவும் காலியான பிறகுதான் போட்டோ கிராபர் பரூக் பாட்டியா எனக்கு அறிமுகமானார். அவர் எனது முகஅழகுக்கு முக்கியம் தராமல் உடல் தோற்றத்தை மிடுக்காக படம் பிடித்தார்.

அந்த போட்டோக்களுடன் பட நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டேன். அப்போது “குவாலிஸ்” என்ற படத் தயாரிப்பாளர் எனது உடல் அழகைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தார். படம் ஓரளவு வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து “மர்டர்” என்ற படத்தில் நடித்தேன். இப்படம் அபார வெற்றி பெற்றதுடன் லட்சக்கணக்கான ரசிகர்களை எனக்கு பெற்றுத் தந்தது.
 
இப்போதெல்லாம் நடிகைகள் உடலை மறைத்து நடித்தால் படம் ஓடாது. இருக்கிற அழகை வெளிக்காட்டினால்தான் ஓடும். ரசிகர்களும் முக அழகை விட உடல் அழகுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். நான் எந்த நடிகையையும் போட்டியாக கருதவில்லை. இதனால் பொறாமை என்ற பேச்சுக்கே என்னிடம் இடம் கிடையாது, என்று கூறியுள்ளார்.

பாலாவுக்கு பாலசந்தர் புகழாரம்

தயாரிப்பாளர் சிவா தான் தயாரிக்கும் புதிய படத்தின் தொடக்க விழாவில் இயக்குனர் பாலாவை கவுரவப் படுத்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டைரக்டர் பாலசந்தர், பாலாவுக்கு நினைவுப்பரிசு வழங்கி, வாழ்த்தி பேசினார்.அவர் மேலும் ஒரு படம் எடுக்குறதுக்கு மூணு வருஷம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். அதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்... என்று டைரக்டர் பாலாவிடம், பாலசந்தர் கேட்டுக் கொண்டார். நான் கடவுள் படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றிருக்கும் டைரக்டர் பாலாவை கோலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவர் பேசுகையில், "நடுத்தர சினிமாவை மேலே எடுத்துச்சென்றவர் பாலா, இவரின் படங்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். என்ன இவர் படங்கள் வெளியாவதற்குத்தான் மூன்று வருஷமாகிறது. இதை நீங்க கொஞ்சம் கட்டுப்படுத்துங்க சார். நான் உங்களின் ரசிகர்களின் தலைவனாக கேட்டுக் கொள்கிறேன். உங்கள் படங்களை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். என்னைப் போலதான் மக்களும். எனவே இரண்டு, மூன்று வருஷம் ரொம்ப ஓவர். ஒரு வருடத்திற்குள் படத்தை முடித்து விடுங்கள். இதை நீங்கள் எனது அட்வைஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். நான் என்ன செய்ய.... வயதாகி விட்டது அதனால் இப்படி அட்வைஸ் செய்யத்தான் வேண்டும். உங்கள் படங்களைப் பார்த்து நான் சிலவற்றை கற்றுக் கொள்கிறேன். எதையெல்லாம் நான் செய்யவில்லை என்று உங்கள் படத்தை பார்த்துதான் நான் அறிந்துக்கொள்கிறேன்." என்றார். 

Rettaisuzhi Tamil Movie Trailer

Swathi Hot Photos











Thambikku Intha Ooru Movie Gallery

Bharath,Sana Khan and Madalasa in Tamil Movie Thambikku Intha Ooru





T. T. Sankaradas Swamigal

T. T. Sankaradas Swamigal was a renowned playwright, director, manager, actor, and also composer. He provided the link between earlier performance traditions and twentieth-century Tamil theatre. Sankaradas Swamigal was born in Kattunayakkanpatti village, Chidambaranar district in 1867. He took lessons from his father, who was a traditional scholar in Tamil. While working in a salt storehouse in Tuticorin, he spent a good deal of time watching plays. At the age of 16 he could compose songs in traditional prosodic forms. At 24, he joined the stage as an actor. He became most popular for mythical antagonists` roles like Iraniyan, Ravana, Yama, Saniswaran, Ghatotkacha, and Dussasana. The story goes that a washerwoman died of fright as he left his tent to remove his make-up soon after a performance as Saniswaran. Because of this reason he quit acting. He remained celibate, hence the title Swamigal, or swami.

T. T. Sankaradas Swamigal`s credentials as an indefatigable teacher of theatrical skills reached Jaffna, Ceylon, where he went in 1900 to train artists. Stories about the importance given to discipline by him still circulate among performers. Members of his company had to avoid smoking, chewing betel leaves, and drinking liquor. He never praised individuals. Sankaradas Swamigal formed the Samarasa Sanmarga Sabha in 1910 and Tattuva Minalochani Vidya Balasabha in 1918. It used to give training young boys to act. The T. K. S. Brothers began their career here. Swamigal supposedly said that children extended far more cooperation than adults. His troupe influenced the phenomenal growth of boys` companies in Tamil Nadu. The repertoire of `Special drama` as it is now called, owes its existence to him. His several musical plays namely Pavalakkodi, Nallatangal, Kovalan, Valli tirumanam and Gnana Soundariare are still popular especially in southern Tamil Nadu. T. T. Sankaradas Swamigal died in 1922.

Rajini's Enthiran Photos

மீண்டும் மக்கள் நாயகன் நாயகனாக


நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் நாயகனாக நடிக்கும் படம் மேதை. இப்படத்தின் 75 சதவீத சூட்டிங் முடிந்து விட்ட நிலையில், மே மாதம் ரீலிஸ்க்கு திட்டமிட்டிருக்கிறார்கள். மேதையில் ராமராஜன் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். காமெடிக்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ராமராஜன் - கவுண்டமணி - செந்தில் கூட்டணி காமெடி பட்டிதொட்டியெங்கும் ரசிகர்களை குஷிப்படுத்தி வெற்றி பெற்றதைப் போல ராமராஜன் - வடிவேலு கூட்டணி காமெடும் பேசப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். படத்தில் 150 பள்ளிக்குழந்தைகளுடன் ராமராஜன் பாடும் பாடல் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறும் மேதை இயக்குனர் என்.டி.ஜி.சரவணன், இந்த படத்துக்கு பின்னர் ராமராஜன் ஒரு ரவுண்ட் வருவார் என்றும் கூறியுள்ளார்.
படத்தில் ராமராஜன், வடிவேலு தவிர இயக்குனர் ராஜ்கபூர், சார்லி, கோட்டை குமார், ஆர்யன், அலெக்ஸ், கொல்கத்தா மாடல் அழகி கவுசிகா, அஜய், ஹாசினி ஆகிய புதுமுகங்கள் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.

Bharatha Rathna Puratchi Thalaivar MGR


 Puratchi Thalaivar MGR Memorial

Chevalier Sivaji Ganesan

Chevalier Sivaji Ganesan statue In Chennai Marina.



Jim Garner,Jack Lemmon, Charlton Heston. Sitting:George Chandler with Sivaji Ganesan.





Dual role in gowravam



In Veerapandia Kattapomman