பாலாவுக்கு பாலசந்தர் புகழாரம்

தயாரிப்பாளர் சிவா தான் தயாரிக்கும் புதிய படத்தின் தொடக்க விழாவில் இயக்குனர் பாலாவை கவுரவப் படுத்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டைரக்டர் பாலசந்தர், பாலாவுக்கு நினைவுப்பரிசு வழங்கி, வாழ்த்தி பேசினார்.அவர் மேலும் ஒரு படம் எடுக்குறதுக்கு மூணு வருஷம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். அதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்... என்று டைரக்டர் பாலாவிடம், பாலசந்தர் கேட்டுக் கொண்டார். நான் கடவுள் படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றிருக்கும் டைரக்டர் பாலாவை கோலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவர் பேசுகையில், "நடுத்தர சினிமாவை மேலே எடுத்துச்சென்றவர் பாலா, இவரின் படங்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். என்ன இவர் படங்கள் வெளியாவதற்குத்தான் மூன்று வருஷமாகிறது. இதை நீங்க கொஞ்சம் கட்டுப்படுத்துங்க சார். நான் உங்களின் ரசிகர்களின் தலைவனாக கேட்டுக் கொள்கிறேன். உங்கள் படங்களை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். என்னைப் போலதான் மக்களும். எனவே இரண்டு, மூன்று வருஷம் ரொம்ப ஓவர். ஒரு வருடத்திற்குள் படத்தை முடித்து விடுங்கள். இதை நீங்கள் எனது அட்வைஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். நான் என்ன செய்ய.... வயதாகி விட்டது அதனால் இப்படி அட்வைஸ் செய்யத்தான் வேண்டும். உங்கள் படங்களைப் பார்த்து நான் சிலவற்றை கற்றுக் கொள்கிறேன். எதையெல்லாம் நான் செய்யவில்லை என்று உங்கள் படத்தை பார்த்துதான் நான் அறிந்துக்கொள்கிறேன்." என்றார். 

0 Response to "பாலாவுக்கு பாலசந்தர் புகழாரம்"