நான் உடலை மறைத்து இழுத்து போர்த்திக் கொண்டு நடித்தால் அந்த படம் ஓடாது, என்று கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். பாலிவுட்டின் கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத் மும்பையில் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், நான் படிப்பை முடித்ததும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் அவர்களை விட்டு பிரிந்து வந்து தனியாக வசித்தேன்.
அப்போது முன்னணி டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் சென்று “சான்ஸ்” கேட்டேன். அவர்கள் என் முகத்தைப் பார்த்து நடிகைக்கான தகுதி இல்லை என்று நிராகரித்தனர். ஆனாலும் மனம் தளரவில்லை. என்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று செலவு செய்தேன். அதுவும் காலியான பிறகுதான் போட்டோ கிராபர் பரூக் பாட்டியா எனக்கு அறிமுகமானார். அவர் எனது முகஅழகுக்கு முக்கியம் தராமல் உடல் தோற்றத்தை மிடுக்காக படம் பிடித்தார்.
அந்த போட்டோக்களுடன் பட நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டேன். அப்போது “குவாலிஸ்” என்ற படத் தயாரிப்பாளர் எனது உடல் அழகைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தார். படம் ஓரளவு வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து “மர்டர்” என்ற படத்தில் நடித்தேன். இப்படம் அபார வெற்றி பெற்றதுடன் லட்சக்கணக்கான ரசிகர்களை எனக்கு பெற்றுத் தந்தது.
இப்போதெல்லாம் நடிகைகள் உடலை மறைத்து நடித்தால் படம் ஓடாது. இருக்கிற அழகை வெளிக்காட்டினால்தான் ஓடும். ரசிகர்களும் முக அழகை விட உடல் அழகுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். நான் எந்த நடிகையையும் போட்டியாக கருதவில்லை. இதனால் பொறாமை என்ற பேச்சுக்கே என்னிடம் இடம் கிடையாது, என்று கூறியுள்ளார்.
0 Response to "அழகை காட்டினால்தான் படம் ஓடும்"
Post a Comment