Kanagavel Kakka - Movie Gallery















சுறா - திரை விமர்சனம்

நடிப்பு: விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்
இசை: மணிஷர்மா
ஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு
தயாரிப்பு: சங்கிலி முருகன்
இயக்கம்: எஸ்பி ராஜ்குமார்

எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... பிடிக்காதா ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர் (!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா? என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம் போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்....

எதிர்காலத்தில் நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை - ஐஸ்வர்யா

அழகிப் பட்டம் வென்ற பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார் ஐஸ்வர்யா. தமிழ் மூலமாகத்தான் அவர் நடிகையானார். இருவர் படம்தான் அவரது சினிமா முகவரி. இதையடுத்து ஜீன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தொடர்ந்து இந்தியில் நுழைந்த அவர் இந்தியில் இன்றளவும் முன்னணியில் இருக்கிறார். இடையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா. தற்போது மீண்டும் தமிழ் பக்கம் அவரது பார்வை திரும்பியுள்ளது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டுள்ள ஐஸ்வர்யா, மணிரத்தினத்தின் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழில் நடிப்பது மிகவும் சவுகரியமாக இருப்பதாக கூறியுள்ள ஐஸ்வர்யா எதிர்காலத்தில் நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டாம் - அஜீத்

தனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்பெயினிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
என் மீது அன்பும், அபிமானமும் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது பார்முலா 2 சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக நான் ஸ்பெயின் வந்துள்ளேன். எனவே மே 1 ந் தேதி என்னுடைய பிறந்த நாளின்போது நான் சென்னையில் இருக்க வாய்ப்பில்லை.
ஆகையால் ரசிகர்கள் பிறந்த நாளின்போது என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஆடம்பரமான முறையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ரசிகர்கள் நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டால் மகிழ்ச்சியடைவேன்" என்று கூறியுள்ளார்.

விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

கிருஸ்துவராக இருந்தாலும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வாராவாரம் வடபழனி முருகன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.


ஆனால் அவர் மகன் விஜய் இதற்கெல்லாம் நேர்மாறாக இருக்கிறார்.  அதனால்தான் ரசிகர்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.

’’தான் நடிக்கும் படங்களில் மட்டும் விபூதி, குங்குமத்தை அள்ளிப்பூசி நடிக்கிறார்.  விநாயகர், முருகன் என்று இந்து கடவுள்களையெல்லாம் வணங்குகிறார்.  நிஜத்தில் மட்டும் ஏன் இவற்றை வெறுக்கிறார்.

சினிமாவில் ஒன்று, நிஜத்தில் ஒன்று என்று இனி அவர் இரட்டை வேசம் போடக்கூடாது.    இனிமேல் அவர் சினிமாவில் விபூதி பூசி நடிக்கக்கூடாது.   இந்து கடவுள்களை வணங்குவது போல் நடிக்கக்கூடாது’’ என்று ரசிகர்கள் ஆத்திரப்படுகிறார்கள்.

விஜய் புதிதாக நடிக்கும் காவல்காரன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் முதல் நாள் பூஜை திருவிடை மருதூரில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் நடந்தது.


ஹீரோ விஜய், டைரக்டர் சித்திக் மற்றும் படக்குழுவினர், விஜய் ரசிகர்கள் என கோயிலுக்கு உள்ளேயேயும் வெளியேயும் எங்கு பார்த்தாலும் கூட்டம்.


 பூஜை முடிந்து அய்யர் விபூதியை எல்லாருக்கும் வழங்கினார். ஆனால் விஜய் அந்த விபூதியை வாங்க மறுத்துவிட்டாராம்.


இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன், 

’’விஜய் அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், இந்துக்களும் படம் பார்ப்பதால்தான் அவரது தொழிலில் உயர்ந்த இடத்தை பிடிக்க முடிந்திருக்கிறது. இதை நினைத்தாவது அந்த விபூதியை வாங்கி அவர் பூசியிருக்கலாம்.

அப்படி இந்து மதத்தின் மேல் நம்பிக்கையில்லாதவர் எதற்காக அந்த கோவிலுக்கு போகணும். வர இயலாது என்று மறுத்திருக்கலாமே? இனிமேலும் இதுபோன்ற புறக்கணிப்புகள் நடந்தால் எங்கள் கட்சி பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காது’’என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஜல்பு பிடிச்சா என்ன பண்ணுவிங்க அம்மணி..

புரசைவாக்கத்திலிருந்து சென்னை அடையாறு பார்க் ஷெரட்டன் பகுதிக்கு வீடு மாறி வந்துவிட்டார் த்ரிஷா.

இது த்ரிஷாவின் விருப்பத்துக்கேற்ப பார்த்துப் பார்த்து கட்டிய வீடாம். வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், வெளி உலகமே மறந்துவிடும் அளவுக்கு அனைத்து வசதிகளும் உண்டாம்.

தான் வெளிநாடுகளில் பார்த்து அனுபவித்த ரசித்த பல விஷயங்களை வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்துவிட்டாராம்.

இந்த வீட்டின் செக்யூரிட்டி சிஸ்டம் சக நடிக நடிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

வீட்டைச் சுற்றிலும் ரகசியமாக கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி வைத்துள்ளாராம் த்ரிஷா. திருட்டு முயற்சி அல்லது தான் இல்லாத போது வரும் நபர்கள் பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம் என்பதால் இந்த வசதியாம்.

வாய்ஸ் லேசர் சிஸ்டம் மூலம் வீட்டுக்கு பூட்டு வசதி செய்துள்ளார். திரிஷாவும், தாய் உமாகிருஷ்ணனும் கதவருகில் நின்று குரல் கொடுத்தால் உடனே திறக்கும். வீட்டுக்குள் நுழைந்ததும் மீண்டும் சாத்திக்கொள்ளும்.

வெளியே யாரேனும் வந்து அழைத்தால் வீட்டுக்குள் இருந்து திரிஷாவோ அல்லது அவர் தாயோ குரல் கொடுத்தால்தான் கதவு திறக்குமாம். வெளிநாடுகளில் இந்த வசதி கொண்ட வீடுகளை சர்வ சாதாரணமாகப் பார்த்தாலும், சென்னைக்கு இது புதுசுதானே...

Ravanan Photo Gallery







வாயசைத்தால் அபராதமா? சமிரா

காரில் ஒலித்த பாட்டுக்கு ஏற்ப வாயசைத்தபடி கார் ஓட்டியதை, செல்போனில் பேசியதாக நினைத்து எனக்கு அபராதம் போட்டார்கள் போலீசார் என்றார் சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம், அசல் படங்களின் நாயகி சமீரா ரெட்டி. போகுமிடமெல்லாம் போலீசுடன் மோதும் ராசி இவருக்கு.


ஏற்கனவே மலேசியா போலீசாருடன் மோதியதில் லிப்டில் இருந்து வெளியில் தள்ளப்பட்டார் சமீரா. இப்போது மும்பை போலீசாருடனும் மோதியுள்ளார்.

போக்குவரத்து போலீசார் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக புகார் கூறியுள்ளார். இதுபற்றி நிருபர்களிடம் சமீரா கூறுகையில், "மும்பையில் இருந்து சாந்தா குரூஸ் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். விமான நிலையம் அருகில் எனது காரை போக்குவரத்து போலீசார் வழிமறித்து நிறுத்தினர். நான் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியதாக குற்றம் சுமத்தினர்.

ஆனால் உண்மையில் நான் செல்போனில் பேசவில்லை. செல்போனில் இருந்து வந்த பாட்டுக்கு ஏற்ப என் உதடுகளை அசைத்தேன். நான் பேசிக்கொண்டு வந்ததாக தப்பாக நினைத்து என்னைப் பிடித்து விட்டனர். அவர்களிடம் செல்போனில் பேசவில்லை என்று எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அபராதத்தை கட்டி ரசீது வாங்கத் தயாரானேன்.

ஆனால் அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

என்னிடம் லஞ்சம் வாங்குவதில் குறியாக இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் நான் நடிகை என்பதை கண்டு பிடித்து எனக்காக போலீசாரிடம் வாதாட, அத்தோடு என்னை விட்டுவிட்டார்கள்...", என்றார்.

மீண்டும் விஜய் பேரரசு கூட்டணி

விஜய் ரொம்ப தெளிவான நடிகர். தனது அடுத்த 5 படங்களுக்கான இயக்குநர்களை முடிவு செய்துவிட்டார்.

வருடத்துக்கு மூன்றுபடம் என்ற தனது பழைய இலக்கை மீண்டும் புதுப்பித்துள்ள விஜய், அதன் படி இந்த வருடம் இன்னும் இரு படங்களை வெளியிடவுள்ளார். அடுத்து சுறா படமும், அதன் பிறகு காவல்காரனும் வெளியாக உள்ளன.

அதற்கடுத்த 3 படங்களை இயக்க இயக்குநர்கள் தயாராக உள்ளனர். அவர்களில் ஒருவர் பேரரசு.
இவர் சொன்ன ஒரு கதை ரொம்பப் பிடித்துவிட்டதால், தன் தந்தையைக் கூட கேட்காமல், பேரரசுவுக்கு வாக்கு கொடுத்துவிட்டாராம் விஜய். 'பாடிகார்ட் ரீமேக்கான காவல்காரன் முடிந்ததும் நம்ம படத்தை ஸ்டார்ட் பண்ணிடலாம்' என பேரரசிடம் கூறியுள்ளாராம்.

ஏற்கெனவே ஜெயம் ராஜா [^], சீமான், அமீர் என நிறைய பேருக்கு இதே போன்ற வாக்குறுதியைத் தந்துள்ளார் விஜய். இவர்களுக்கெல்லாம் முன்பே தங்கர் பச்சானுக்கு வாக்கு கொடுத்திருந்தார் விஜய், ஒன்பது ரூபாய் நோட்டு பட விழாவில்.

இவர்களில் யார் படம் எப்போது ஆரம்பிக்கும் என்பது மட்டும் விஜய்க்குத் தான் தெரியும்.

Madharasapattinam Trailer

Akshida Photo Gallery










ப்ரீத்திக்கும் லீக்கும் காதலாம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீக்கும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கும் காதல் என்று சமீப காலமாக கிசுகிசுக்கப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்த அணியின் நட்சத்திர பவுலர் பிரட் லீ. இவர் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்குப் பிறகு நடந்த இரவு நேர விருந்தில் ப்ரீத்தியும் பிரட் லீயும் பிரட்டும் ஜாமும் போல ஒட்டி உறவாடினார்களாம்.
இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து மனம் வெதும்பித்தான் யுவராஜ் சிங் அணியை விட்டே வெளியேறுவேன் என்று கூறியதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது (யுவராஜ் சிங் இப்போது அதை மறுத்துள்ளார்).

இருவரும் டேட்டிங் போனதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை பிரட் லீயின் மேனேஜர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து பஞ்சாப் அணியினர் இப்படிக் கூறுகின்றனர்:

"ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பஞ்சாப் அணி வீரர்கள் மீது தனி பிரியம். அதனால்தான் அவர் மிக நெருக்கமாகப் பழகி வந்தார். நட்புடன் அணைத்துக் கொண்டார்.

முன்பு யுவராஜ் சிங்கை அவர் கட்டிப் பிடித்ததை இப்படித்தான் மிகைப்படுத்தி விட்டார்கள். அணியின் நன்மைக்காகவே ப்ரீத்தி இந்த அளவு சுதந்திரமாக அனைவருடனும் பழகி வருகிறார். அதைப் போய் தவறாகப் பேசுவதா?" என்றனர்.
 

உணர்ச்சி மிகுதில் பிரியங்காவை கட்டிப்பிடித்த ரசிகர்

ஆர்வம் மிகுதியால் தன்னைக் கட்டிப்பிடித்த ரசிகர் ஒருவருக்கு பளார் விட்டார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.


பொதுவாகவே படங்களில் பிஸியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. தவிர்க்க முடியாமல் பங்கேற்கும் நிலை வந்தாலும் ஏகப்பட்ட செக்யூரிட்டிகளோடு தான் வருகிரார்.

சமீபத்தில் ஒரு விருந்துக்கு அவரை அழைத்திருந்தார் ப்ரியங்காவுக்கு வேண்டப்பட்டவர். கட்டாயம் பங்கேற்றே தீர வேண்டும் என்பதால், படப்பிடிப்பு தளத்திலிருந்து கேரவனில் உடை மாற்றிக் கொண்டு விருந்துக்கு சென்றார் ப்ரியங்கா.

விருந்து நடந்த வீட்டின் முன்னால் வந்து இறங்கியபோது அங்கு ஏராளமான இளைஞர்கள் கூடி நின்றனர். அதில் ஒருவர் பிரியங்கா சோப்ராவை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு படாரென்று ப்ரியங்காவைக் கட்டிப் பிடித்தார். கூடி நின்ற மற்ற இளைஞர்களும் அவரை சூழ்ந்து, ப்ரியங்காவைத் தொட முயன்றனர்.

இத்ல் ஆத்திரமடைந்த பிரியங்கா சோப்ரா, அந்த ரசிகரின் பிடியில் இருந்து திமிறி விடுபட்டார். அப்போதும் அந்த இடத்தைவிட்டு நகராத ரசிகர் கன்னத்தில் ஓங்கி ஒரு பளார் விட்டார்.

உடனே ப்ரியங்காவுடன் வந்திருந்த பாதுகாவர்கள் அந்த ரசிகரை அடித்துத் துவைத்தனர். அவரை போலீ சில் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் பிரியங்கா வேண்டாம் விட்டு விடுங்கள் என்று கூறி விட்டார்.

இந்த சம்பவத்தால் மூட் அவுட் ஆன ப்ரியங்கா, விருந்துக்குச் செல்லாமல் வண்டியை வீட்டுக்கு விடச் சொன்னதில், விருந்துக்கு அழைத்த நண்பர் மனம் உடைந்தது தனிக்கதை!

சிலுக்குவின் வாழ்க்கை படமாகிறது


ழுபதுகளின் இறுதியில் வண்டிச்சக்கரம் படம் மூலமாக தமிழ்சினிமாவுக்கு வந்தார் சிலுக்கு. (சில்க் ஸ்மிதா) விஜயவாடா விஜயலஷ்மி என்ற பெயரை சினிமாவுக்காக சில்க்ஸ்மிதா என்று மாற்றி வைத்தவர் நடிகரும் கதாசிரியருமான வினுசக்கரவர்த்தி.
 

இவர்தான் சிலுக்கை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். 18 வயதிலேயே திருமணம் ஆன பிறகும் கூட வறுமையிலிருந்து மீள முடியாமல், தூரத்து உறவு அத்தையுடன் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த சிலுக்கு பதினேழு ஆண்டுகள் தன் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் திரையுலகை கட்டி ஆண்டார். 


அப்போதெல்லாம் திரைப்படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் ஒரு நிபந்தனை போடுவார்களாம் தயாரிப்பாளர்களுக்கு. அதாவது கண்டிப்பாக சிலுக்குவின் நடனம் அந்தப் படத்தில் இடம்பெற வேண்டுமென்று.

ஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு ஆப்பிள் பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு தூக்கிப் போட்டாராம் சிலுக்கு. அந்தப் பழம் ஏலம் போனது என்பது எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமை. இன்னமும் பல திரை கதாநாயகிகள் சிலுக்குவின் கண்களுக்கு யார் கண்களுமே ஈடு இணை கிடையாது என்று பேட்டி தருகிறார்கள்.

சிலுக்கு இல்லாத காரணத்தால் ரஜினி படத்தையே ஒரு முறை விநியோகிஸ்தர்கள் வாங்க மறுத்தார்கள். பின் சிலுக்குடன் ரஜினி ஆடும் ஒரு பாடலை இணைத்து வெளியிட்டுயிருக்கிறார்கள். சிலுக்கு தான் ஆசைப்பட்டு நடிக்க விரும்பியது பாக்கியராஜ் உடன். நடித்த படம், ரகசிய போலீஸ்.

சிலுக்கு கடைசி வரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. யாரையும் கிட்ட நெருங்க விடாமல் இருந்த சிலுக்கு தன் தூரத்து உறவினரான டாக்டர் ஒருவருடன் வாழ்ந்திருக்கிறார்.

சிலுக்கு தன் வாழ்நாளில் பலருக்கு உதவியாய் இருந்துள்ளார். சில நக்சலைட் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார்.
நக்சலைட் ஆட்கள் அக்கா என்று அழைக்கும் அளவிற்கு பழக்கம் இருந்திருக்கிறது. 


நடிக்கை வரவில்லையென்றால் நக்சலைட்
ஆகியிருப்பேன் என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார். நக்சலைட்டுடன் அவர் ஏன் தொடர்பு வைத்திருந்தார்.   அவருக்கு ஏன் நக்சலைட் மீது இத்தனை ஆர்வம்? என்ற கேள்விகளுக்கு இது வரை விடையில்லை.

திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சிலுக்குவின் தனிப்பட்ட வாழ்க்கை மிக சோகமானது. 1996ஆம் ஆண்டு வடபழனியில் இருந்த தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார். திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

சிலுக்குவின் திடீர் மரணத்தால் அவர் நடித்து வந்த பல திரைப்படங்கள் பாதித்தது.
சிலுக்கினால் பயனடைந்தவர்கள் பலர் என்றாலும் கடைசிவரை அவருக்கு நண்பர்களாய் இருந்தவர்கள் மனோரம்மா, லட்சுமி, வடிவுக்கரசி, வினு சக்கரவர்த்தி, முத்துராமன், கங்கை அமரன் போன்ற ஒரு சிலர் தான். அவரது இறுதி ஊர்வலத்திற்கு வந்தவர்களும் இவர்கள் மற்றும் ஒரு சிலர் தான்.

இப்படிப்பட்ட பேரலையும்,பெரும் சோகமும் நிறைந்த சிலுக்கின்  வாழ்க்கை  சினிமாவாகிறது.
இந்தி, தமிழில் ஏக்தாகபூர் இப்படத்தை தயாரிக்கிறார். மிலன்ருத்யா இயக்குகிறார். சிலுக்கு கேரக்டரில் நடிக்க வித்யாபாலனிடம் பேசி உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.